புதுச்சேரியில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.  

மத்திய அரசு வெளியிட்ட உத்தரவு படி, மத்திய அரசின் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அடுத்த வகுப்பிற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும், தோல்வியடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்விலும் தோல்வி அடைந்தால், அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டும் என்று திருத்தும் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவிக்கையில், "மத்திய அரசின் சுற்றறிக்கையின் படி, புதுச்சேரியில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரியில் மத்திய அரசின் கல்விமுறை தான் பின்பற்றப்படுவதால், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படாது என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUDUCHERRY School Education All Pass


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->