கோடிகோடியாய் கொட்டிகொடுத்தாலும்.. வேண்டாம்.- திட்டவட்டமாய் எச்சரிக்கும் ராஷிக்கண்ணா.!   - Seithipunal
Seithipunal


மிழ் திரைத்துறையில் அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், ஷைத்தான் கி பச்சா போன்ற படத்தில் நடித்தவர் தான் நடிகை ராஷி கண்ணா. மேலும் ராஷி கண்ணா ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். 

இவர் தற்போது, WORLD FAMOUS LOVER என்னும் தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரேசா ஆகிய மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி கலக்கியுள்ளார். 

இந்நிலையில், நடிகை ராஷி கண்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில்,  "எப்பொழுதும் கதை தேர்வில் எச்சரிக்கையாக இருப்பேன். கதை பிடிக்கவில்லை என்றால் பணம் அதிகம் கொடுத்தாலும், கூட நடிக்க மாட்டேன். ஆனால், அதே நேரத்தில் கதை நன்றாக இருந்தால், சம்பளத்தை குறைக்க கூட தயாராக இருப்பேன்.

ஒரு சிறந்த கலைஞருக்கு ஆத்ம திருப்தி தான் முக்கியம். பணம் முக்கியமல்ல. அப்படி ஒரு நல்ல கதையை தேர்வு செய்து நடித்தால் கூட சில படங்கள் தோல்வி அடைகிறது. இதற்கு காரணம், கதை கேட்கும் பொழுது நன்றாக இருக்கும். திரைக்கு வரும்போது கதை மாறிவிடுகிறது. வெற்றி தோல்வி நமது கையில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rashi Kanna speech about movie story


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->