சொத்துக் குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே வகுரணி சந்தைப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை உசிலம்பட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த நீதிபதி என்பவர் வருமானத்துக்கு அதிகமாக மதுரை, திண்டுக்கல் பகுதியில் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

இந்த சொத்துக்களை அவர் தனது மனைவி ஆனந்தி, மகள் ஜெயதேவி, மகன் இளஞ்செழியன் பெயரிலும், பினாமிகள் பெயரிலும் வாங்கியுள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எனக்கு தெரியவந்தது. ஆகவே, முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி 19.4.2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனது புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்றுத் தெரிவித்து இருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தப்போது அரசு தரப்பில், 'இந்த வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணை நிறைவடைந்து விட்டது. 

முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அனுமதி அளித்துள்ளார். ஒரு வார காலத்தில் அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படும்' என்று வாதிடப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case file against admk ex mla neethipathi for property case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->