விஷாலின் "ரத்னம்" திரைப்படத்தின் ரிலீஸ்? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ரத்னம்''. இது திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தூத்துக்குடி, திருச்சி, வேலூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இந்த திரைப்பட ரிலீஸ் அறிவிப்பு குறித்து பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்று பகிர்ந்து அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rathnam movie release date announced


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->