நடிகர் சூர்யாவுடனான சந்திப்பு குறித்து தமிழில் பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் அவர் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வசூலில் சாதனை படைத்தது. விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்த ''வணங்கான்'' படத்தில் இருந்து விலகினார். 

இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா 13 கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா இன்று மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான்  சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்துள்ளார். 

மேலும், இருவரும் சந்தித்துக்கொண்ட போது எடுத்த புகைப்படத்தை நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மரியாதை, அன்பு என பதிவிட்டுள்ளார். அதேபோல், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் "இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது.  உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது, மனமார்ந்த வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார். தற்போது அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin Tendulkar tweet in tamil about meet actor Surya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->