என்ன ஆச்சு சமந்தாவுக்கு? இப்படி ஒரு முடிவா? சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. இதற்கு சமீப காலமாகவே ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சமந்தா தனது கணவரை பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதுபோலவே கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது இருவரது ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின்னர் சினிமாக்களில் சமந்தா கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். இந்த விவாகரத்து வலியை மறக்க அவர் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றார். ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.

இதற்கு காரணம் சமீபத்தில் நாக சைதன்யாவுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகை ஷோபிதா துலிபல்லாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் சிலர் நேரடியாக அதுபோன்ற பதிவுகளில் சமந்தாவை மென்ஷன் செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த பிரச்சனையில் இருந்து ரசிகர்களின் அன்பினால் கடினமான காலத்தை கடந்து வருவதாகவும் உருக்கமாக பதிவிட்டு இருந்தார். 

இந்த நிலையில், மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக வெளி நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் அடுத்து ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha 1 year break for cinema


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->