"செ*ஸியாக இருப்பது ஹார்ட் வொர்க்" புஷ்பா பட பாடல் குறித்து சமந்தா பதிவு.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக நடிகை சமந்தா இருக்கிறார். தற்போது நடிகை சமந்தா நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்தவுடன் நடிகை சமந்தா மிக வேகமாக சினிமாவில் படங்களில் கமிட்டாகி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களை தாண்டி தற்போது பாலிவுட் திரையிலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளார். 

விவாகரத்துக்கு பின்னர் அவர் தனது நட்பு வட்டாரத்தை விரிவுபடுத்த துவங்கிவிட்டார். மேலும் முன்னணி நடிகைகளுடன் அவர் அவ்வப்போது அரட்டை அடிப்பது ஊர் சுற்றுவது என்று தனது பொழுதை கழித்து வருகிறார். மேலும், தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கின்ற திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தனது ஹார்ட் வொர்க் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் செக்ஸியாக இருப்பது மிகவும் கடினமான வேலை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha about o antava song


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->