சமந்தாவை இழிவு படுத்த நினைத்த தயாரிப்பாளர்.. அவரது காதுமுடியை வைத்து புதுகதை சொன்ன சமந்தா.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பல வெற்றி படங்களில் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  நடனமாடிய 'ஓ சொல்றியா மாமா' என்ற பாடல்  பட்டித் தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யா உடன் விவாகரத்து பெற்ற பின்னர் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சமந்தாவிற்கு  மையோசைட்டிஸ் என்ற வியாதி தாக்கியது. அந்த நோயிலிருந்து மன உறுதியுடன் மீண்டு வந்த சமந்தா மறுபடியும் தனது நடிப்பு கேரியரை தொடர்ந்தார்.

சமீபத்தில் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவு வெற்றியைப் பெறவில்லை. கடந்த வாரம் வெளியான சாகுந்தலம் என்ற திரைப்படமும் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான சிட்டிபாபு  சமந்தாவின் ஸ்டார் மதிப்பு முடிவடைந்து விட்டது எனவும் அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும்  குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு தனது சமூக வலைதளத்தின் மூலம் பதிலடி கொடுத்திருக்கும் சமந்தா  அவரது ஆணாதிக்கத் தனத்தை சுட்டிக்காட்டும் வகையில் டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருப்பவர்களுக்கு தான் காதுகளில் முடி அதிகமாக வளரும் என்ற தகவலை கூகுளில் சர்ச் செய்து ஸ்கிரீன்ஷாட் ஆக வைத்துள்ளார். தயாரிப்பாளர் சிட்டிபாபுவிற்கு காதுகளில் அதிகமாக முடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலின் மூலம் அவர் சிட்டிபாபுவின் ஆணாதிக்க தனத்தை  குறிப்பிட்டு காட்டியிருப்பதாக திரையுலகினர் விமர்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samatha hit back to producer citi babu for his controversial comments


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->