பாண்டியன் ஸ்டோர்ஸ் சாய் காயத்ரியின் அழகான புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும். அந்தவகையில் கடந்த 2018 முதல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். 

நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக வாழும் கதைதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் அதிக ரசிகர்களை கொண்ட கேரக்டராக முல்லை கேரக்டர் இருக்கிறது. 

முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் துடிப்பான சுறுசுறுப்பான நடிப்பு அனைவரையும் ஆனால் எதிர்பாராதவிதமாக சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இந்த கதாபாத்திரத்தை எப்படி ரிப்ளேஸ் செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடிக்க வந்தார். 

முதலில் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆனால் தனது திறமையான நடிப்பால் காவியா அறிவுமணி அனைவரையும் கவர்ந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் காவியா நிறைய ரசிகர்களை பெற்றார். 

இந்த நிலையில், தான் கண்ணனுக்கு திருமணம் ஆவது போல காட்டப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா கதாப்பாத்தில் நடித்து வந்த தீபிகா வெளியேற்றப்பட்டு சாய் காயத்ரி நடித்து வருகின்றார். இவர் இதற்கு முன்பு நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஃபோட்டோஷூட் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sari gayathri Photoshoot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->