"தி கேரளா ஸ்டோரி"க்கு தடை?! வழக்கு தொடுத்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரைலர் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு ஒரு பக்கம் ஆதரவும், ஒரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய அமைப்புகள் இந்த திரைப்படம் பொய்யான ஒரு கட்டமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

அதே சமயத்தில் கேரள மாநிலத்தில் உண்மையில் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, நாடு கடத்தி அவர்கள் தீவிரவாதிகளாக மாற்றப்படுவதாக ஒரு பக்கம் வாதம் வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்த காணொளிகளையும் திரைப்படத்திற்கான ஆதரவாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையே,  இந்த திரைப்படத்திற்கு கடுமையான கட்டணங்களை தெரிவிப்பதாக கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்து இருந்தார்.

மேலும், இந்த திரைப்படம் ஒரு பொய் மூட்டை என்றும் அவர் கடுமையாக தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். கேரள மாநில பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிரான இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படம் தொடர்பாக கேரளா உயர்நீதிமன்றத்தை நாடி விவரம் பெற்றுக்கொள்ளுமாறும் மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC case The Kerala story


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->