குக் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் குக் வித் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழில் மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் அடுத்ததாக குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான காடன் மற்றும் தொடரி ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத காரணத்தினால் மீண்டும் தனது வெற்றி பார்முலாவான காடு, இயற்கை, காதல் கதைக்களத்தில் களமிறங்கியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன்.

குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு செம்பி என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த திரைப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா, நிலா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sembi movie 1st look poster release


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->