இன்று முதல் ஓடிடியில் ரிலீஸான 'செம்பி' திரைப்படம்.!
Sembi movie streaming on Disney plus hotstar
தமிழில் மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் அடுத்ததாக குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினை வைத்து செம்பி என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.
இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான காடன் மற்றும் தொடரி ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத காரணத்தினால் மீண்டும் தனது வெற்றி பார்முலாவான காடு, இயற்கை, காதல் கதைக்களத்தில் களமிறங்கியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன்.
இந்த நிலையில்‘செம்பி’ திரைப்படம் டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் செம்பி திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில்' வெளியாகியுள்ளது.
English Summary
Sembi movie streaming on Disney plus hotstar