பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி காலமானார்.! - Seithipunal
Seithipunal


பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி பிரியா உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல சின்னத்திரை நடிகரான பரத் கல்யாண். சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் என தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சீரியல்கள் மட்டுமல்லாமல் பாட்டாளி, சுள்ளான் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா தொடரில் கூட நடித்திருந்தார். நடிகர் பரத் கல்யாணத்துக்கு, பிரியா (வயது 43) என்ற மனைவி உள்ளார். 

இந்த நிலையில் இவரது மனைவி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். பரத் கல்யாண் மனைவி மறைந்த நிலையில் சின்னத்திரை நடிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரியாவின் சகோதரி வெளியூரில் உள்ளார் அவர் வந்ததும் நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Serial actor Bharat kalyan wife passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->