முர்ஷிதாபாத் கலவரம்: வாயை திறங்க! ஏன் அமைதியா இருக்கீங்க? கொந்தளிக்கும் யோகி ஆதித்யநாத்! - Seithipunal
Seithipunal


பற்றி கடும் விமர்சனம் – “வங்கதேசத்தை விரும்பினால் அங்கேயே போகட்டும்”

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பதற்றமான சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர், மேலும் 150-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, முர்ஷிதாபாத் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் அமைதியாக இருப்பதாகவும், அவர்கள் உண்மையான நிலைப்பாட்டை வெளிக்காட்டவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“வங்கதேசத்தில் நடப்பதை ஆதரிக்கிறவர்களுக்கு இந்தியா ஏன் சுமையாக இருக்க வேண்டும்? அவர்கள் விருப்பமாயின் அங்குச் சென்று வாழட்டும். இந்திய நிலத்தில் கலவரம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது,” எனத் தெரிவித்தார்.

முதல்வர் மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டுகளை கூறிய யோகி, “மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரக்காரர்களுக்கு அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாக முர்ஷிதாபாத் தீயில் எரிகிறது.

ஆனால் அரசு அமைதியாக இருக்கிறது. இதுபோன்ற அராஜகங்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP CM Condemn to TMC WB Govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->