மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது மற்றும் அதிகாரம்; சட்டமுன்வடிவை நாளை தாக்கல் செய்யும் முதலமைச்சர்..!
PWDs to be represented and empowered in local government bodies Chief Minister to table bill tomorrow
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட முன்வடிவை, நாளை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்யவுள்ளார்.
இதுகுறித்து முன்னதாக பேசியிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும், நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டம் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் திருத்தப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
PWDs to be represented and empowered in local government bodies Chief Minister to table bill tomorrow