பாலியல் புகார் : நானே பாதிக்கப்பட்டேன் - நடிகை விசித்ரா!....பின்னனியில் சரத்குமார்? - Seithipunal
Seithipunal


ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் குழு,  சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மூலம் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல்  புகார்கள் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


இந்நிலையில் இது தொடர்பாக மௌனம் கலைத்து பேசியுள்ள நடிகை விசித்ரா, "நானே நடிகர் சங்கத்தில் சில ஆண்டுகள் முன்னதாக பாலியல் புகார் ஒன்று கொடுத்திருந்தேன். இந்தப் பிரச்சினை இப்போதுதான் நடப்பதைப் போன்று பேசுகிறார்கள். நடிகர் விஷால் இப்போதுதான் கமிட்டி அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் என்று சொன்னார்கள்.

ஆனால், சங்க உறுப்பினர்களாக எங்களுக்கு அப்படி எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை என்றும், நான் புகார் கொடுக்கும்போது இருந்த பொறுப்பாளர்கள் அனைவரும் மாறிவிட்டனர் என்று கூறியுள்ளார். மேலும் பாலியல் பிரச்சினை தொடர்பாகப் புகார் அளித்தால், சங்கத்திற்கு உள்ளாகவே உள்ள நிர்வாகிகள் பேசி முடித்துவிடுகிறார்கள் என்றும், அது பற்றி செய்திகள் வெளியே தெரிவதில்லை. நான் கேள்விப்பட்டவரை இதுதான் நடப்பதாக தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசியுள்ள அவர், எனது புகார் தொடர்பாக தமிழ்நாடு ஸ்டெண்ட் யூனியனும், தெலுங்கு யூனியனும் பேசியதுடன் பிரச்சினை அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும், அதை நான் கேட்டபோது, விவகாரத்தை இதற்கு மேல் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுங்கள் என்று எனக்கு அறிவுரை கூறியதாக கூறியுள்ளார். மேலும், அப்போது சரத்குமார் சங்க நிர்வாகத்திலிருந்ததாகவும், அவர்,'சட்டரீதியாக இதை நீ அணுகி இருக்கவேண்டும் என்றும், நடிகர் சங்கத்திற்கு வந்திருக்கக் கூடாது என்று கூறியதாக தெரிவித்துள்ளார். 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual complaint I was victimized Actress Vichitra Sarathkumar in Pinnani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->