கேரளாவை போல் தெலுங்கு திரையுலகிலும் பாலியல் தொல்லை! - நடிகை சமந்தா! - Seithipunal
Seithipunal


மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து கேரளாவில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் வெளியாகின. சமூக வலைதளங்கள் மூலம் நடிகைகள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தினர்.

இதன்படி, மலையாள திரையுலக பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஏற்கனவே அந்த குழு  புகார் தெரிவித்த நடிகைகளை நேரில் சந்தித்தும் , தொலைபேசியில் அழைத்தும் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், மலையாள நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குனர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உட்பட 9 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நடிகை சமந்தா ஹேமா கமிட்டி அறிக்கையை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவர் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, "தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம்.

இதே போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக 'வாய்ஸ் ஆப் வுமன்' அமைப்பு 2019-ல் உருவாக்கப்பட்டது. பாலியல் தொல்லை தொடர்பான விசாரணையின் அறிக்கையை கேரளாவை போல் தெலுங்கு திரையுலகிலும் வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்" என்று சமந்தா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual harassment in Telugu film industry like Kerala Actress Samantha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->