ஷாருக்கானின் ஜவான் படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் அட்லி. இவர் நடிகர் விஜய் நடித்த இயக்கிய தெறி மெர்சல் பிகில் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இடம் பிடித்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபும் நடித்துள்ளனர்.

பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியாக உள்ளது.

இதனையடுத்து தற்போது படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜவான் படத்தின் முதல் பாடல் இன்று மதியம் 12.50 மணிக்கு படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த பாடல் 1000 பெண் நடன கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் 15 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sharukh Khan intro song today release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->