பிரபல வில்லன் நடிகருக்கு ஜோடியாகும் ஷில்பா மஞ்சுநாத்.! - Seithipunal
Seithipunal


நட்டி நடராஜ் நடிக்கும்  திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நட்டி நடராஜ் கடைசியாக தனுஷின் கர்ணன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்ததையடுத்து பலரும் அவரது நடிப்பை பாராட்டினர். இந்நிலையில் தற்போது நட்டி நடராஜ் அடுத்ததாக சைக்கோ திரில்லர் கதை கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையமைக்கவுள்ளார். மேலும், இந்த படத்தை வி.எம் முனிவேலன் வேலன் புரோடஷ்சன் சார்பில் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளராக கிறிஸ்டோபர் என்பவர் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் நட்டி நடராஜ் க்கு ஜோடியாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ஷில்பா மஞ்சுநாத் தமிழில் காளி மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shilpa manjunath is with natti nadraj movie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->