இந்தப் புகைப்படத்தில் துருதுருவென இருக்கும் இந்த ஹீரோ யார்? உங்களுக்கு தெரிகிறதா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையையும் உழைப்பையும் நம்பி  இன்று தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் சிவ கார்த்திகேயன். தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா,  வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என பல வெற்றி படங்களை கொடுத்து மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர்.

தற்போது இவரது நடிப்பில் மாவீரன் என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதற்கு முன்பு இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாததால் இந்தத் திரைப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

சினிமா நட்சத்திரங்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானால் அவை ரசிகர்களிடம் வைரலாகும். அந்தப் புகைப்படத்தை ரசிகர்களும் ட்ரெண்டிங்காக்கி பகிர்ந்து வருவார்கள். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் இவர்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தப் புகைப்படத்திலிருப்பது நமது ஹீரோ சிவகார்த்திகேயன் தான். இப்போது போலவே அந்தப் புகைப்படத்திலும் துருதுருவென க்யூட்டாக இருக்கிறார் எஸ்.கே.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shiva karthikeyan childhood pic went viral


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->