காதல் பட பாடலை பாடிய தமிழ் சினிமாவின் பாடகி.. உயிரிழப்பு.!
singer Ramaniyammal died
பின்னணி பாடகி ரமணியம்மாள் ஒரு நாட்டுப்புற பாடகி ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வரவில்லை என்றாலும் இவர் பாடிய அனைத்து தமிழ் பாடலும் வெற்றி பாடல்களாய் அமைந்தது.
இவர் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த பொம்மை நாயகி என்ற படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். 60 வயதை கடந்த ரமணியம்மாள் இன்று தன் சொந்த கிராமத்தில் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார்.
இவர் காதல், தெனாவட்டு, ஜுங்கா, காத்தவராயன், ஹரிதாஸ், காப்பான் போன்ற பல தமிழ் படங்களில் பாடியுள்ளார். பல பக்தி பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.