வைரலாகும் சிவகார்த்திகேயனின் திருமண வீடியோ..! பிரபலங்கள் செய்யும் ரகளை.!
Sivakarthikeyan marriage video
கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். திரைப்படங்கள் அதிகமாக குடும்ப சென்டிமென்ட் அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். எனவே இவரது திரைப்படங்களுக்கு எப்பொழுதும் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
மேலும், இவரது திரைப்படங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இம்பிரஸ் செய்யும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். தற்போது இவர் தளபதி விஜயின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய இரண்டு படங்களிலும் தல ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடி நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா நடிக்கும் நாய் சேகர் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளதார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் திருமண வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Sivakarthikeyan marriage video