சைக்கோ இயக்குனருடன் இணைந்த எஸ் ஜே சூர்யா.! வெளியான மாஸ் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா இவர் தல அஜீத்தை வைத்து இயக்கிய வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஆனார்.

மேலும் நியூ, வியாபாரி, இசை போன்ற திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லனாகவும் நடித்துள்ளார்.

அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மெர்சல், ஸ்பைடர் ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியான மாநாடு திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

அந்த வகையில் தற்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை, வெங்கட்ராகவன் இயக்கத்தில் கடமை பேய் படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு வெப்சீரிஸிலும் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் எஸ் ஜே சூர்யாவிடம் இயக்குனர் மிஷ்கின் ஒரு கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SJ Surya in mysskin movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->