வெளியானது சூது கவ்வும் படத்தின் ப்ரோமோ வீடியோ.!
soodhu kavvum movie promo vedio
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என்று பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. இதற்கு 'சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி சிவா' நடித்துள்ளார். இவருடன் இணைந்து ராதாரவி, ரமேஷ் திலக், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்தத் திரைப்படம் வருகிற 13-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது அதன் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
English Summary
soodhu kavvum movie promo vedio