விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்புக்கு தயாரான நடிகர் சூரி.. வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகிய நிலையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை வைத்து மையமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் விடுதலை.

இந்த திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் பாகம் எடுக்கும் போதே 2ம் பாகத்திற்கான படப்பிடிப்புகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஒரு சில முக்கிய காட்சிகள் மட்டும் எடுக்கப்படாமல் உள்ளதாக வடக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது விடுதலை படத்தில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் விடுதலை இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் வகையில் நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soori ready viduthalai 2 movie video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->