திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு.! மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க நடிகர் சங்கம் வலியுறுத்தல்!! - Seithipunal
Seithipunal


லியோ படத்தில் கதாநாயகி த்ரிஷாவுடன் தனக்கு ஒரு காட்சி கூட இல்லை எனவும், அவருடன் ரேப் சீனில் நடிக்க ஆவலாக இருந்ததாகவும், மேலும் நடிகைகளை கொச்சை படுத்தும் வகைகள் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதற்கு நடிகை த்ரிஷா எக்ஸ் தள பதிவின் மூலம் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்

மேலும் நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாகவும், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும் பல பிரபலங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி, நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் "மூத்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகைகள் குறித்து ஒரு பேட்டியில் பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். திரைத்துறையில் பெண்கள் நுழைவதும் சாதிப்பதும் இன்னமும் சவாலாகவே இருக்கும் இன்றைய சூழலில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளை பற்றி இப்படி மோசமான கருத்துகளைத் தெரிவித்தது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.  

தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் உடன் நிற்கும். சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகான் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அதிர்ச்சியுறும் அவரது இப்போக்கு கவலையையும், கோபத்தையும் உண்டாக்குகிறது. ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பொறுப்புணர்ந்து பேச அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்.

இக்கீழ்செயல் காரணமாய்த் தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது. இந்நிகழ்வினை உதாரணித்து, வரும் காலங்களில் மற்ற நடிகர்களும் பொதுவெளியில் கருத்துகள் பகிரும்போது கவனமாய் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தனி நபர் விமர்சனம் மட்டும் அல்லாது, வெகு நாட்களாக பொது ஊடகங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல பொய்க் கதைகளையும் திருத்த நிகழ்வுகளையும் பொழுதுபோக்கு என்ற பெயரில் பரப்பி பரபரப்பை உண்டாக்கிக் கொள்கின்றனர்.

இதில் சோகமும் கோபமும், இத்துறை சார்ந்தவர்களே அவற்றைத் தொகுத்து வழங்குவதுதான். மென்மையுள்ளம் படைத்தவர்கள் என்பதனால் ஒவ்வொரு முறையும் நடிக சமுதாயத்தினர் இலக்காக்கப்படுவது இனியும் நிகழாது. தீவிரமான எதிர்வினைகள் சாத்வீகமான முறையில் தொடுக்கப்படும் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த சூழலில் தெரிவித்துக் கொள்கிறது" என தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Indian Actors Association condemns Mansoor Ali Khan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->