"அவரது வேலுக்கு என்றுமே நெஞ்சில் இடமுண்டு"... ஸ்ருதியின் புதிய "டாட்டூ".! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். சமீபகாலமாக திரையுலகிலிருந்து விலகியிருந்த இவர் தெலுங்கு சினிமாவில் வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுக்கும்  நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சலார் என்ற பான் இந்தியா திரைப்படத்திலும் தி ஐ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இசை மற்றும் சினிமா என பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது புதிய டாட்டூ ஒன்றின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே தனது பெயரை தமிழில் பச்சை குத்தி இருக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது முருகப்பெருமானின் வேலை டேட்டூவாக வரைந்துள்ளார்.

இது பற்றி மனம் திறந்துள்ள ஸ்ருதிஹாசன் ஆன்மீகம் சம்பந்தமாக டாட்டூ போட வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்தது. அதற்கு என்ன டேட்டூ போடலாம் என்று யோசித்தபோது எனக்கு முருகப்பெருமானின் ஞாபகம் தான் வந்தது. அவரது வேலுக்கு என்னுடைய இதயத்தில் என்றுமே இடமுண்டு. அதனால் முருகப்பெருமானின் வேலை பச்சை குத்தி விட்டேன் என தெரிவித்திருக்கிறார். மேலும் ஆன்மீகம் தன்னை பாதுகாப்பாகவும் அடக்கமாகவும் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spirituality keeps me humble Shruti Haasan opens up about her new tattoo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->