"ஸ்ரீ தேவி - The Life Of Legend" முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போனிகபூர்.!
Sri devi The life Of Legend book
தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் கந்தன் கருணை திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பின் துணைவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அடி எடுத்து வைத்தார்.
ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவரது 50 ஆண்டுகால வாழ்க்கையில் இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தேசிய திரைப்பட விருது, பத்மஸ்ரீ விருது, பிலிம் தேர் விருது மற்றும் மாநில, மத்திய அரசுகளின் விருதுகளையும் பெற்று இருக்கின்றார். இவர் கடந்த 1996 இல் போனி கபூரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இத்தகைய நிலையில் கடந்த 2018-ல் அவர் பாத்ரூம் தொட்டியில் மூச்சு திணறி உயிரிழந்தார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் வரலாறு புத்தகமாக வர இருப்பதாக போனி கபூர் அறிவித்துள்ளார். தீரஜ் குமார் எழுதும் இந்த புத்தகத்திற்கு ஸ்ரீதேவி தி லைப் ஆஃப் லெஜன்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Sri devi The life Of Legend book