மறைந்த நடிகர் மரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற முக்கிய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

அதிலும் குறிப்பாக, இந்த பாத்திரத்தில் நடித்த மரிமுத்தி பேசிய  'ஏய்... இந்தாம்மா' என்ற வசனத்திற்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், மாரிமுத்து கடந்த மாதம் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிந்தபோது, திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்தார். ஆனால், அவரால் முழுவதுமாக நடிக்க முடியவில்லை. இது ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே மறைந்த மாரிமுத்துவுக்கு ரசிகர்கள் சிலை அமைத்துள்ளனர். அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் சிலை வைத்துள்ளனர். 

அங்கு மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கும் சிலை வைத்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

statue put for actor marimuthu in vilupuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->