என்ன நட.. ஏறி வாறா ஜிலுக்கா.. நடிகை த்ரிஷா பகிர்ந்த ஸ்டோரி! இணையத்தில் வைரல்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றிநடை திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இந்த 'தி கோட்'. திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன், நடிகர்கள் பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

மேலும், இந்த 'தி கோட்' படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதில் நடிகர் விஜய்யின் மகன் கதாபாத்திரத்திற்கு அமெரிக்கா சென்று டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடிகை  த்ரிஷா 'தி கோட்'  இப்படத்தில் வரும் 'மட்ட' பாடலுக்கு நடிகர் விஜயுடன் நடனமாடியிருந்தார்.

இந்நிலையில், நடிகை  த்ரிஷா 'தி கோட்'  படத்தின் 'மட்ட' பாடலின் படப்பிடிப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இப்படத்தில் கேமியோ ரோலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து உள்ளார். பின்னர் நடிகர் அஜித் நடித்த மங்காத்தா படத்தின் பிஜிம் இப்படத்தில்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Story shared by actress Trisha Viral on the Internet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->