நடிகை தமன்னாவின் நடனத்துடன் வெளியானது ஸ்ட்ரீ படத்தின் புதிய பாடல்.! - Seithipunal
Seithipunal


அமர் கவுஷிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஸ்ட்ரீ'. ஹாரர் காமெடி கதைக்களத்தில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து, தற்போது இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே நடிக்கின்றனர். அடுத்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் புதிய பாடலான 'ஆஜ் கி ராத்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு நடிகை தமன்னா நடனம் ஆடியுள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stree movie new song released


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->