சன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து உருக்கம்!! எவரும் அறியா சில தகவல்கள்!!
sunny leyon says about her life
பிரபல நடிகை சன்னி லியோன் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "கடந்த 2012ஆம் ஆண்டு ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் நான் பாலிவுட்டில் அறிமுகப்படுத்த பட்டேன். அதன் பின்னர், பல திரைப்படங்களில் நடித்து உள்ளேன்.

தற்பொழுது கோக-கோலா என்ற ஹாரர் காமெடி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனது கடந்த காலத்தை சிலர் சுட்டிக்காட்டி பேசி வருகின்றனர். ஆனால், இன்றுடன் ஏழு ஆண்டுகள் முடிந்துவிட்டன. நான் அதுகுறித்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. எனக்கென ஒரு நட்பு நட்பு வட்டம் உள்ளது.
நான் அதிக அளவில் நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் பார்ட்டிகளில் கலந்து கொண்டதில்லை. 2011இல் எனது காதலர் டேனியலை திருமணம் செய்து கொண்டேன். 2017இல் நாங்கள் நிஷா என்ற பெண்ணை தத்தெடுத்து குழந்தையாக வளர்த்து வருகிறோம். மேலும், எனக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் இருக்கின்றது.

குடும்ப வாழ்க்கையும், திரையுலக வாழ்க்கையும் இணைந்து செயல்படுவதில் பல சிக்கல்கள் உள்ளது. அது மிகவும் கடினமானது. இருப்பினும் அதனை நான் சமாளித்து வருகின்றேன். இந்த உலகிலேயே மிகச் சிறந்த செயல் குழந்தைகளை கவனிப்பது தான். நான் தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கின்றேன்.
பொழுதுபோக்குத் துறையில் நான் 17 வருடங்களாக இருக்கிறேன். எனக்கு ஒன்றும் பெரிய அளவில் மாற்றம் தெரியவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட படைப்பாளிகள் என்று எவரும் இல்லை. எனவே, மற்றவரின் படங்கள் குறித்து நான் விமர்சிக்க மாட்டேன். நான் எப்போதும் விரும்புவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை தான்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary
sunny leyon says about her life