சேலத்தில் பரபரப்பு - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது.!
school teacher arrested for harassment in salem
சேலம் மாவட்டத்தில் உள்ள, கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, வெள்ளாளபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தாரமங்கலம், காட்டு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் பயந்து போன மாணவி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் நேற்று கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலர் செந்தில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து சேலம் போலீசார், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school teacher arrested for harassment in salem