ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியாமல் தத்தளிக்கும் பொதுமக்கள்..கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியாளர்..?
People cant even get into an ambulance The District Collector does not care
வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கருகம்பத்தூர், ஆஜிபுரா பகுதியில், சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கடந்து செல்லும் தெருவில் பல ஆண்டுகளாக தெருவின் மத்திய பகுதியில் மின்கம்பம் அமைத்துள்ளனர்.
இங்கு குப்பைகளை தொடர்ந்து கொட்டப்படுவதால் சேர்த்து தினம் தினம் துர்நாற்றம் வீசும் அவல நிலை, துர்நாற்றத்தால் பல்வேறு தொற்று நோய்களில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர், இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி துறை நிர்வாகம் மின்கம்பத்தை நடுவிலே அமைத்தபடி அதை அப்படியே விட்டு சாலையின் மத்தியில் மின்கம்பத்தை வைத்து சிமெண்ட் சாலை அமைத்த அதிமேதாவிகள் இங்கு காணலாம்,
ஒரு அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ்கள் நுழைய முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்த வழியாக ஆட்டோக்கள் கூட உள்ளே சென்று வெளியில் வர மிகுந்த சிரமத்திற்குள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மின்துறையிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வரி வசூல்களுக்கும் மற்ற இதர வரி வசூல்களுக்கு மட்டும் வந்து வசூல் செய்து இது போன்ற அவல நிலையை சரி செய்து தாருங்கள் என்று கேட்டால் அவர்களை துன்புறுத்தி வருவதாகவும் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, அந்த மின்கம்பத்தின் சம்பந்தப்பட்ட மின் துறைக்கு அந்த மனுவானது 20 நாட்களுக்கு மேலாகியும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் மனு பார்வர்ட் ஆகவில்லை என்று தெரிவிக்கின்றனர். இதற்கு எஸ்டிமேஷன் போட்டு அதிக செலவாகும் என்று பொதுமக்கள் அனைவரிடம் பணம் வசூலித்து ஒரு பெரிய தொகையோ தாருங்கள் செய்து முடிக்கின்றேன் என லஞ்சத்தை எதிர்பார்த்து தாமதித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களின் நலன் கருதி அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வந்து போகும் அளவில் இந்த கம்பத்தை அகற்றி, இந்தத் தெரு சாலையை 12 அடி அல்லது 15 அடி ஒப்புதல் பெற்றுள்ளார்களா என சரி பார்த்து, ஒதுக்குப்புறமாக நட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,
பொதுமக்கள் வாகனங்களில் நடமாட்டத்திற்கு ஏதுவாகவும் இந்த அரசு அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இதுபோன்ற ஒப்பந்ததாரர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் வகையில் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஒப்பந்த பார்வையாளர் சம்பந்தப்பட்ட துறை அரசு உயர் பதவி ஊழியர் மீதும் தகுந்த சட்டம் - ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையான கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
People cant even get into an ambulance The District Collector does not care