சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்த மாஸ் இயக்குனர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்று வந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரை அடுத்ததாக யார் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்த நிலையில், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Super star Rajinikanth 169 movie announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->