"செம்ம தூள்" விடுதலை படம் பார்த்து சூப்பர் ஸ்டாரின் திரை விமர்சனம்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின்  டாப் 5 இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில்  சூரிய கதையின் நாயகனாகவும் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்த  விடுதலை திரைப்படம் கடந்த 31 ஆம் தேதி அன்று வெளியானது.

இந்தத் திரைப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை  தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.  இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்  வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய சூரி மற்றும் விஜய் சேதுபதியுடன், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன்,  கேப்டன் மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரை அனுபவத்தை  கொடுத்திருப்பதாக கொண்டாடி வருகின்றனர். சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது திரைவிமர்சகர்களும் திரைத்துறை வல்லுனர்களும் இந்தத் திரைப்படத்தை வெகுவாக பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுதலை படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பட குழுவிற்கு தெரிவித்திருக்கிறார். அந்த செய்தியில்  விடுதலை திரைப்படம் இதுவரை தமிழ் திரையுலகம் பார்க்கிற ஒரு கதைக்களம். இந்தப் படம் ஒரு திரைக்காவியம் என பாராட்டி இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

சூரியின் நடிப்பு பிரமிக்க வைப்பதாக தெரிவித்த அவர் இசைக்கு ராஜா என்றுமே இளையராஜா தான் என பாராட்டியுள்ளார். படத்தின் இயக்குனர் வெற்றிமாறனை தமிழ் சினிமாவின் பெருமை என வெகுவாக புகழ்ந்து இருக்கிறார். இப்படி ஒரு படத்தை எடுப்பதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

superstar rajii vews about viduthlaii ̓movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->