சூர்யா பிறந்த நாள் - முக்கிய அறிவிப்பு வெளியிட்ட சூர்யா 44 படக்குழு.! - Seithipunal
Seithipunal


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா நாளை தன்னுடைய 49 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்தனை முன்னிட்டு சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya 44 movie team update announce for surya birthday


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->