பாலா- சூர்யா படம் குறித்த அட்டகாசமான தகவல்.! படப்பிடிப்பு எப்போது.?! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா கடந்த ஆண்டு சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்திருந்தது அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தத் திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கிறது என்று கூறினாலும் கூட சாதிய அடையாளங்களை வைத்து பலரையும் மனக்கசப்புக்கு படம் தள்ளியது. 

அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் நிறைவடைந்து இருந்தது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்தில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்திற்கு பின்னர் நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எழுபதுகளில் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை ஹேமமாலினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கலாம் எனவே வயதான தோற்றத்தில் நடிக்கும் சூர்யாவுக்கு ஹேமமாலினி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya in Bala movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->