மும்பையில் செட்டில் ஆன சூர்யா குடும்பம்.! வைரல் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. மும்பையை சேர்ந்த இவர் முதலில் ஹிந்தியில் நடிக்க ஆரம்பித்தார். இவர் இந்தி தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். 1999 ஆம் வருடம் வாலி திரைப்படம் மூலமாக சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். வாலி திரைப்படம் வெற்றியை அடுத்து தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார். மேலும் முதன்முதலாக பூவெல்லாம் கேட்டுப்பார் என்று திரைப்படத்தில் சூர்யாவுடன் ஜோதிகா இணைந்து நடித்தார். இந்த படத்தின் பின் இவர்களது பழக்கம் நட்பாக மாறியது. 
அதன்பின் காதலர்களாக மாறி 2006ம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தினார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

மேலும் இவரது மகள் தியாவிற்கு 16 வயது பூர்த்தியான நிலையில்  ஜோதிகா மற்றும் சூர்யாவின் மகன் மற்றும் மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தியாவின் கையில் நாய்க்குட்டி வைத்திருக்கும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற இடம் மும்பை தான் என்று ஜோதிகா கருதுவதால் அவர்கள் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்களாம். சூர்யாவும் படப்பு நாளில்.. பெற்றோர் வீட்டில் தங்கிக் கொண்டு மற்ற நாட்களில் மும்பைக்கு வந்து விடுகிறாராம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya Jyothika settled In Mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->