சூர்யாவுடன் கைகோர்க்கும் பாலா, லோகேஷ் கனகராஜ்‌... ரசிகர்களுக்கு டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்..! - Seithipunal
Seithipunal


அஜித் விஜய்க்கு அடுத்தபடியாக ரசிகர்களை அதிகளவு கொண்ட நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளது.  தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் சூர்யாவிற்கு ரசிகர்கள் அதிகம். நடிகர் சிவகுமாரின் மகனாக அவர் சினிமாவில் வந்திருந்தாலும், பல அவமானங்களை சந்தித்து திரைத்துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது‌. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இறுதிக் காட்சியின் போது ஐந்து நிமிடமே வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த ஐந்து நிமிட காட்சிகளில் உள்ள சூர்யாவின் செயல்பாடுகள் மக்களை பெருமளவு கவர்ந்து விட்டது. 

 

இந்த படத்திற்கு பின்னர் சூர்யா பாலாவுடன் 41வது படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப் படத்திலும் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து மிகப்பெரிய படம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து இருந்த நிலையில், அப்படி ஒரு படம் எடுக்கப்பட்டால் கட்டாயம் அதில் சூர்யா இதுவரை எதிர்பார்க்காத அளவு இருப்பார் என்றும் கூறப்பட்டது.

லோகேஷ் கனகராஜூடன் இரும்புக்கை மாயாவி என்ற படத்தில் சூர்யா உள்ளதாகும், தற்போது வரை நெகட்டிவ் கேரக்டரில் நடிக்காத சூர்யா 30 வருடங்கள் கடந்து முதல்முறையாக வில்லனாக மிரட்டிய நிலையில், அதனை போன்றதொரு மாசான கேரக்டரில் அவர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் - சூர்யா படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SURYA logesh Lanagaraja Bala direction movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->