இயக்குனர் பாரதிராஜா குறித்து சற்றுமுன் இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட செய்தி.! - Seithipunal
Seithipunal


நுரையீரல் தொற்று காரணமாக இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவதாக தெரிவித்திருந்த நிலையில், இயக்குனர் சுசீந்திரன் நேற்று மருத்துவமனையில் பாரதிராஜாவை சந்தித்து பேசி உள்ளார்.

இது குறித்து சுசீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைவருக்கும் வணக்கம். எங்களின் 'வள்ளிமயில்' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளோம் என்பதை, மிகுந்த மகிழ்ச்சி உடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

32 நாட்கள் திண்டுக்கல், மதுரை, தென்காசி என திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

நேற்று பாரதிராஜா அப்பாவை மருத்துவமனையில் சந்தித்து பேசினேன். இம்மாத இறுதியில் எங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறினார். மீண்டும் பாரதிராஜா அப்பாவுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் நன்றி" என்று அந்த செய்தி குறிப்பில் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் படம் தான் வள்ளிமயில். இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வருகிறார்.

நடிகர்கள் விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் இந்த படத்தின் First Look அண்மையில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

susindren say about bharathiraja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->