பிரபல தமிழ் இயக்குனருக்கு விபத்து! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோகம்!  - Seithipunal
Seithipunal


இன்று காலையில் வாக்கிங் சென்ற இயக்குனர் சுசீந்திரன் வாகனம் மோதியதில் கை முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். 

'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'பாண்டியநாடு', போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு  'கென்னடி கிளப்' மற்றும் 'சாம்பியன் என இரண்டு படங்கள் வெளியாகிய நிலையில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார் சுசீந்திரன். இன்று காலையில் அவர் வழக்கம்போல் 
வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று மோதியதில் காயமடைந்துள்ளார். உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயமடைந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். பின்னர் அவருக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் சுசீந்திரன், விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் அவரை 3 வாரங்களுக்குத் தொடர் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil cinema director suseenthiran met accident while walking


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->