சோழர்களா? பாண்டியர்களா? யுத்தத்திற்கு தயாராகும் தமிழ் திரையுலகம்! விவரங்கள் உள்ளே!
tamil cinema is going to witness chola and pandya history on same day
தமிழ் திரையுலகம் ஒரு சங்க கால மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. பண்டைய தமிழ்நாடு சேர சோழ பாண்டியர்களால் காணப்பட்டு வந்தது. இதில் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் தீராப் பகை பண்டைய காலம் தொட்டே இருந்து வந்தது. தற்போது இந்த மோதலுக்கு தமிழ் திரையுலகமும் தயாராகி வருகிறது.
கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் சோழர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறிமுகம் இயக்குனரான தரணி ராஜேந்திரன் என்பவர் யாத்திசை என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படம் பாண்டியர்களின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2 வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இத் திரைப்படத்தின் டிரைலரை பா ரஞ்சித், மோகன் ஜி, கல்பாத்தி அகோரம் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டனர். இத்திரைப்படம் வெளியாகும் நாளன்று பொன்னியின் செல்வன் முதல் பாகத்தையும் மறு வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சோழர்களின் வரலாற்றைச் சொல்லும் பொன்னியின் செல்வனும் பாண்டியர்களின் வரலாற்றைச் சொல்லும் யாத்திசை திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
English Summary
tamil cinema is going to witness chola and pandya history on same day