வைரலாகும் 'தல' அஜித்தின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படம்..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். படம் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில் தற்போது தொடர்ந்து நீண்ட நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதையடுத்து தற்போது அஜித்குமார், 'குட் பேட் அக்லி' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் முதல் போஸ்டர் வெளியானது.

பல கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த போஸ்டரில் அஜித்தின் லுக் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்நிலையில் இப்படம் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் அஜித்குமார் கட்டம் போட்ட செக்ட் சட்டையில் , வெள்ளை முடி மற்றும் தாடியில் சிரித்த முகத்துடன் இருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித்தின் இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thala Ajith Latest Picture Viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->