தளபதி 66 படத்தின் தலைப்பு இதுவா.?! ரொம்ப வித்தியாசமா இருக்கே.?!
Thalapathy 66 Title may varisu
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார்.
தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.
நடிகர் விஜயுடன் பிகில், பீஸ்ட், மெர்சல், சர்க்கார் உள்ளிட்ட படங்களில் யோகி பாபு நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்துள்ள நிலையில், தற்போது தளபதி 66 படத்திலும் யோகி பாபு கம்மிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கு பெயரை படக்குழு முடிவு செய்துவிட்டதாகவும், தெலுங்கில் இந்த படத்தின் பெயர் வாரசுடு என்றும், தமிழில் வாரிசு என்றும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் லீக்காகி இருக்கின்றன.
English Summary
Thalapathy 66 Title may varisu