அந்த சூப்பர் ஹிட் படத்தில் ரஜினியுடன் கைக்கோர்க்க இருந்த விஜய்.! ஜஸ்ட் மிஸ்.!  - Seithipunal
Seithipunal


1999 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் படையப்பா. இந்தத் திரைப்படத்தில்  சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன்,  ராதாரவி, சிவாஜிகணேசன், நாசர் மணிவண்ணன், செந்தில் என மிகப் பெரிய சித்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். படையப்பா படத்திற்கு முன்பு ஏராளமான ரஜினி படங்கள் வெளியாகியிருந்தாலும் இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களின் மத்தியில் ஒரு தனி இடத்தை பெற்றது. இத்திரைப்படத்தில் ரஜினியின் ஸ்டைலான நடிப்பு மற்றும் ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான வில்லத்தனம் ஏ ஆர் ரஹ்மானின் இசை என ரஜினி ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமைந்தது.

இத்திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகளான நிலையில் தற்போது  இந்தப் படத்தினைப் பற்றிய ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களிடம் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அந்த செய்திகளின்படி தளபதி விஜய் படையப்பா படத்தில் நடிக்கயிருந்ததாகவும் அந்த வாய்ப்பு எப்படியோ மிஸ் ஆனதாக தளபதி தெரிவித்ததாகவும் அந்த செய்திகள்  வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின.

இந்நிலையில் தளபதியே அந்த செய்தியை பற்றி  தற்போதைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் தான் ரஜினி சார் உடன் எப்படியாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பதற்காக  படையப்பா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரமாவது கிடைக்குமா என  வாய்ப்பு கேட்டதாக தெரிவித்திருக்கிறார் தளபதி. இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வைரலாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathy vijay reuest a small role in padayappa to act with super star


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->