தங்கலான் திரைப்படம் - சாதிப் பிரச்சினை?....மக்களை அறிவூட்ட வேண்டும் - பா.ரஞ்சித்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பா.ரஞ்சித் கபாலி, காலா, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து தற்போது இவர் இயக்கி வெளியான  'தங்கலான்' படத்தில் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி டேனியல் கேல்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.

கடந்த 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேலும் பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் முதல் முறையாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இந்த படம்  ஹிந்தி மொழியில் வெளியாகாமல் இருந்தநிலையில், வரும் 30-ம் தேதி அங்கு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சாதிப் பிரச்சினை இந்தியா முழுவதும் உள்ளதாகவும், அதனால் நான் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அம்பேத்கரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக தெரிவித்த அவர், அதை என் கலையின் மூலம் பேச விரும்பினேன். நான் மக்களை மகிழ்விக்க மட்டும் விரும்பவில்லை, அவர்களுக்கு அறிவூட்டவும் விரும்புகிறேன் என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangalan Movie Caste Issue People Need To Be Enlightened pa Ranjith


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->