ஆஸ்கார் விருதுக்கு செல்லுமா தங்கலான்? - வெளியானது முக்கிய தகவல்.! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் புரோமோசனுக்காக கோவைக்கு வந்திருந்த தங்கலான் படக்குழுவினர், செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் தரப்பில் தங்கலான் படம் ஆஸ்காருக்குச் செல்லுமா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. 

அதற்கு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் பதிலளித்துள்ளதாவது, ” நிச்சயம் படத்தினை ஆஸ்காருக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். இந்த ஆண்டு ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்போகின்றார்கள். அந்த அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் தங்கலான் படத்தை பரிந்துரைக்கு அனுப்பவுள்ளோம்.

அதன் பின்னர், ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா தங்கலான் படத்தினை ஆஸ்காருக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தால் கட்டாயம் தங்கலான் படம் ஆஸ்காருக்குச் செல்லும். ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா டீமில் இருப்பவர்கள் படத்தின் ட்ரைலரைப் பார்த்துவிட்டு படம் கட்டாயாம் ஆஸ்காருக்கு பரிந்துரைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றுத் தெரிவித்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thangalan movie team press meet in coimbatore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->