போஸ்டருடன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தங்கலான் படக்குழு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. பா. ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன்,  பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படம் நாடாளுமன்ற வாக்குப்பதிவு முடிந்த பிறகு ரிலீசாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தங்கலான் திரைப்படத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை பார்வதி இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டரை பகிர்ந்து வாழ்த்தியுள்ளது. கங்கம்மா எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் பார்வதி நடித்துள்ள நிலையில், பிறந்த நாள் வாழ்த்துகள் கங்கம்மா என்று படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் பார்வதியை வாழ்த்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thangalan movie team publish new poster uplode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->