தேசிய விருது பெற்ற கதாபாத்திரத்தை 'மிஸ்' பண்ணிய நடிகர்.. எந்த படம், எந்த நடிகர் என்று தெரியுமா? - Seithipunal
Seithipunal



கடந்த 2011ம் ஆண்டு மதுரையை கதைக் களமாகக் கொண்டு, அங்கு நடைபெறும் சேவல் சண்டையை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் 'ஆடுகளம்'. இப்படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி இருந்தார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார் மற்றும் டாப்ஸி கதாநாயகியாக நடித்திருந்தார். 

ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், ஆறு தேசிய விருதுகளையும் அள்ளிச் சென்றது. சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பாளர் மற்றும் சிறந்த நடன இயக்குனர் விருதுகளோடு ஸ்பெஷல் ஜூரி விருது ஒன்றும் ஆடுகளம் படத்திற்கு கிடைத்தது. 

இந்த ஸ்பெஷல் ஜூரி விருது ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயபாலனுக்கு கிடைத்தது. இந்த பேட்டைக்காரன் கதாபாத்திரம் படத்தின் முதல் பாதி வரை எமோஷனலான பாசிட்டிவ் கதாபாத்திரமாகவும், இடைவேளைக்குப் பிறகு நெகட்டிவ் கதாப்பாத்திரமாகவும் மாறியது. தனது அசுரத் தனமான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் ஜெயபாலன். 

அந்த அளவுக்கு ஜெயபாலன், பேட்டைக்காரனாகவே அந்த படத்தில் வாழ்ந்திருந்தார். ஒரு கட்டத்தில் இவரைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் நன்றாக இருந்திருக்காது என்று எண்ணுமளவு அவரது நடிப்பு இருந்தது. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேறு ஒரு நடிகரை தான் வெற்றிமாறன் முதலில் அணுகி உள்ளார் 

ஆனால் அந்த நடிகர் அப்போது வேறு படங்களில் பிசியாக இருந்ததால், ஆடுகளம் படத்தை மறுத்துள்ளார். அதன் பிறகே ஜெயபாலன் தேர்வு செய்யப் பட்டார். தேசிய விருது கதாபாத்திரத்தை நழுவ விட்ட அந்த நடிகர் வேறு யாருமல்ல. நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Actor Who Rejected National Award Character And Movie


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->